Home /News /tamil-nadu /

போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பல் - ஒரு டிராக்டர், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பல் - ஒரு டிராக்டர், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒரு டிராக்டர், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒரு டிராக்டர், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எம்.ஆர். பட்டிணம் கிராமத்தில் நள்ளிரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  • News18
  • Last Updated :
    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே மணல் கடத்தி கொண்டிருந்த கும்பல் போலீசாரை கண்டதும், வாகனங்களை விட்டுவிட்டு தப்பிஓடியது. 

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எம்.ஆர். பட்டிணம் கிராமத்தில் நள்ளிரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் தொண்டி காவல் ஆய்வாளர் முருகேசன் உட்பட போலீஸார் கூட்டாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு டிராக்டரில் மணல் கடத்திக் கொண்டிருந்த கும்பல் அவர்களை கண்டதும் வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

    Also read... தந்தை வாங்கிய கடனுக்கு 10ஆம் வகுப்பு மாணவன் கொலை... திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

    இதையடுத்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 1 டிராக்டர் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களையும்  கைப்பற்றி வழக்கு பதிந்து தப்பி ஓடிய மணல் கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    -செய்தியாளர்: வீரக்குமரன்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Ramanathapuram, Sand mafia

    அடுத்த செய்தி