Home /News /tamil-nadu /

படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள்: மதுரை ஆதீனம்

படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள்: மதுரை ஆதீனம்

படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள்: மதுரை ஆதீனம்

படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள்: மதுரை ஆதீனம்

படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வ.உ.சியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் வ.உ.சி பிறந்தநாள் விழா, 150 பானைகளுடன் பொங்கல் விழா,  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,  திருவள்ளுவர் வழியில் வ.உ.சி புத்தக வெளியீட்டு விழா, ஆசிரியர் தின விழா என  ஐம்பெரும் விழாவாக  நடைபெற்றது.

    மதுரை ஆதினம் 293வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

    பின்னர் மதுரை ஆதினம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். அதேபோல் இன்று நேற்றல்ல வெள்ளையர்களை எதிர்த்து கொண்டாடப்பட்ட விழா திலகர் தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை துவக்கி வைத்தவர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை அரசே ஏற்று நடத்த வேண்டும். நம் சமுதாயத்திடம் ஓட்டு கேட்க வரும் அரசியல்வாதியிடம் ஒற்றுமையாக இருந்து நம் கோரிக்கையை ஒருமித்த கருத்தாக குரல் எழுப்ப வேண்டும். வெள்ளாளர் சமுதாயத்திற்கு அடையாளமாக இருந்த கர்னல் பதவி பறிபோய் விட்டது.

    Also read: கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார்: அண்ணாமலை

    சுதந்திரம் அடைந்த இவ்வளவு நாளுக்கு அப்புறம் அரசு சிதம்பரனாருக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. தாமதமாகவே அதை மீண்டும் இந்த சமுதாயத்திற்கு வழங்க சமுதாயத்தினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து போராடி பெற வேண்டும்.

    படிக்கும் மாணவர்கள் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ  இல்லையோ டாஸ்மார்க் சென்று சரக்கு வாங்குகிறார்கள். ஆகவே இளைய தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.

    மத்தியில் உள்ள மோடி அரசு இந்தியாவை பாதுகாத்து வருகிறது.  மோடியின் செயலால் லடாக் எல்லைப்பகுதி பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டது. மோடி இல்லை என்றால் லடாக் படாக்  ஆகியிருக்கும். நித்யானந்தாவின் கைலாஷ் ஆகிவிட்டதால் அவர் கைலாயத்திற்கு சென்று விட்டார். அவரால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

    இவ்விழாவில் திமுக அதிமுக மற்றும்  அரசியல் கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்கள்.

    செய்தியாளர் - கு.தமிழ்ச்செல்வன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Madurai Adhinam, News On Instagram, Tasmac

    அடுத்த செய்தி