ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதில் முறைகேடு - ஊழியர் மீது கிராம மக்கள் புகார்

மாதிரிப்படம்

ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களிடம் ரேஷன் பொருட்களை வழங்காமல் குறைந்தளவான பொருட்கள் மட்டுமே அரசால் அனுப்பி வைக்கப்பட்டுவதாக குறை கூறுகிறார்.

 • Share this:
  ரேசன் கடைகளில் முறையாக பொருட்கள் வழங்கவில்லை என பரமக்குடி அருகே உள்ள  கிராம மக்கள் குற்றச்சாட்டு..

  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்குட்பட்ட நயினார் கோவில்,போகலூர். ஆகிய  ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 153 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் வாரத்தில் 7 நாட்களில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரமக்குடி தலூகாவிற்குட்பட்ட பொதுவக்குடி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்து, அரிசி உட்பட பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக தினந்தோறும் பொதுமக்கள் சென்று  வருகின்றனர்.

  Also Read: Shocking Video: விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ஸ்கூட்டி.. அடுத்த கணமே நடந்த அதிர்ச்சி சம்பவம்

  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக  பொதுவக்குடி ரேஷன் கடையில் வேலை பார்க்கும் ரேஷன் கடை ஊழியர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களான பருப்பு, அரிசி, சீனி, எண்ணெய், போன்றவற்றை அளவு குறைவாக வழங்கிவருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Also Read:  மேலும் 4 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டை: அமைச்சர் தகவல்!

  அதுமட்டுமின்றி ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களிடம் ரேஷன் பொருட்களை வழங்காமல் குறைந்தளவான பொருட்கள் மட்டுமே அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முழுமையாக பொருட்கள் வழங்க முடியவில்லை குறை கூறுகிறார். மேலும் வாரத்தில் 3நாட்கள் மட்டும் தான் பணிக்கு வருகிறார். இதனால் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன்  (ராமநாதபுரம்)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: