Home /News /tamil-nadu /

கடன்கார ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது: எச்.ராஜா விமர்சனம்

கடன்கார ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது: எச்.ராஜா விமர்சனம்

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

கடன் வாங்குவதில் தப்பில்லை என்றும் திருப்பி செலுத்தும் அளவிற்கு ஏற்ப கடன் வாங்க வேண்டும் என்றும் கூறிய ஹெச்.ராஜா, இலவச கலர் டிவி திட்டத்தால்தான் தமிழகத்தின் கடன் உயர்ந்ததாக விமர்சித்தார்.

    திமுக அரசு முதல் 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியது என்றும் தற்போது தமிழகத்தில் கடன்கார ஆட்சி நடைபெற்றுவருவதாக பாஜக முன்னாள்தேசிய தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பாஜக நிர்வாகி இல்ல வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச். ராஜா மணமக்களை வாழ்த்தி ஆசீர்வாதம் செய்து வாழ்த்துரை வழங்கினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா, முதல் 90 நாட்களில் 40 ஆயிரம் கோடி கடன் வாங்கிய திமுக அரசு அடுத்து வர இருக்கின்ற ஆறு மாதங்களில் 92 ஆயிரம் கோடி கடன் வாங்கப் போவதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது கடன்கார ஆட்சி தமிழ் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எப்போதும் நிதி பற்றாக்குறை பண வீக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறிய ஹெச்.ராஜா,  ஆதனால் தான் நிதி அமைச்சர் அகவிலைப்படி கொடுக்க முடியாது என்றும்  குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்றால் தகுதியானவர்களை பார்த்து கொடுப்பதாகவும் கூறுவதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எம்.பி.களின் எண்ணிக்கையை உயர்த்துவது தமிழகத்துக்கு நல்லது: அண்ணாமலை!


    மேலும், 1967ல் கூறிய அதே ஏமாற்றுத் தனத்தை மீண்டும் திமுகவினர் செய்கிறார்கள். அப்போது, மூன்று படி அரிசி கொடுக்கிறேன் என்று கூறினார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் மறுநாள் மூன்று படி லட்சியம் ஒரு படி அரிசி நிச்சயம் என்று கூறினார்கள். அதுவும் சென்னையில் ஒரே ஒரு ரேஷன் கடையில் மட்டும் தான் வழங்கினார்கள்” என்று குற்றம் சாட்டினார்.

    அரசு கடன் வாங்குவது தப்பில்லை என பா.சிதம்பரம் கூறியுள்ளது குறித்து பேசிய ஹெச்.ராஜா, ‘ வருவாயில் 30 சதவீதத்துக்கும் மேல் கடன் வாங்கிவிட்டால் எப்படி திருப்பிக் கொடுக்க முடியும். அரசின் வருவாயில்  70% வருமானம் ஊதியத்திற்கு, பென்ஷனுக்கும் செல்கிறது. மீதி இருக்கின்ற 30% வருமானத்தில் வட்டியை கட்டுவதா அல்லது கடனை திருப்பிக் கொடுப்பதா’ என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும் படிங்க: கள்ளச் சந்தையில் மது விற்பதற்கு லஞ்சம்: வீடியோ வெளியான நிலையில் காவலர் சஸ்பெண்ட்


    கடன் வாங்குவதில் தப்பில்லை என்றும் திருப்பி செலுத்தும் அளவிற்கு ஏற்ப கடன் வாங்க வேண்டும் என்றும் கூறிய அவர், “2006ம் ஆண்டு  வரை  தமிழகத்தின் கடன்28,000 கோடி ரூபாயதாக இருந்தது.  கலர் டிவி கொடுக்கிறேன் என்று ஆரம்பித்து அது போன்ற இலவசங்களால் 5 லட்சத்து எழுபத்தி ஏழாயிரம் கோடி கடனில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள். பொறுப்போடு அரசாங்கம் செயல்படவில்லை என்றால் தமிழகம் நாளை கடன் வாங்குகின்ற தகுதியை இழந்து விடும் ” என்றும் தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: BJP, H.raja

    அடுத்த செய்தி