Home /News /tamil-nadu /

உடல் முழுவதும் சகதி பூசி கமுதியில் விநோத வழிபாடு... சேத்தாண்டி வேடமிட்டு ஆயிரக்கணக்கானோர் நடனம்

உடல் முழுவதும் சகதி பூசி கமுதியில் விநோத வழிபாடு... சேத்தாண்டி வேடமிட்டு ஆயிரக்கணக்கானோர் நடனம்

சேத்தாண்டி வேடம்

சேத்தாண்டி வேடம்

Kamudi Muthumari Amman Temple Festival : கமுதியில், கோடைகால வெப்பத்திலிருந்து உடல்  ஆரோக்கியத்தை பாதுகாக்க வினோத வழிபாடு நடத்தப்பட்டது. அதன்படி, உடல் முழுவதும் சகதி பூசி, கைகளில் வேப்பிலை ஏந்தி பக்தியுடன், ஆயிரக்கணக்கான பக்தர்கள்  சேத்தாண்டி வேடமிட்டு நடனமாடினர்.

மேலும் படிக்கவும் ...
    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரி அம்மன் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு. பக்தர்கள் கோடைகாலத்தில்  தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், தங்களது உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடமிட்டு, கைகளில் வேப்பிலை ஏந்தி பயபக்தியுடன், மேளதாளங்கள் முழங்க இசைக்கு ஏற்றவாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நடனமாடி, தங்களது வினோதமான நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

    கமுதியில் நகரின் மையப் பகுதியில் அருள்மிகு  முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கே முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலின் முக்கிய திருவிழாவான பங்குனி பொங்கல் விழா, ஒவ்வொரு ஆண்டும் 15 நாட்கள் தொடர்ந்து  நடைபெறும்.



    இந்நிலையில், கொரோனா ஊரடங்கால், கடந்த இரண்டு ஆண்டுகளுகளாக இந்த திருவிழா நடைபெறவில்லை.  தற்போது திருவிழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு கடந்த 9ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான இன்று முத்துமாரி அம்மனுக்கு, கோடை காலத்தில் தங்களது உடல்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து, உடல் நலம், உடல் ஆரோக்கியத்தை அம்மன் பாதுகாக்க வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து தங்களது வினோத நேர்த்திக் கடனை செலுத்தினர்.



    Must Read : சென்னை, மதுரையில் சதம் அடித்த வெயில்... மக்கள் வேதனை

    இதற்காக கமுதி சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு தங்களது நேத்தி கடனை நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

    செய்தியாளர் - சர்க்கரை முனியசாமி, கமுதி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram, Summer, Temple

    அடுத்த செய்தி