Home /News /tamil-nadu /

Lockdown | ஊரடங்கில் நேரத்தை வீணடிக்காமல் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை கற்றுத் தேர்ந்த மாணவர்கள்

Lockdown | ஊரடங்கில் நேரத்தை வீணடிக்காமல் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை கற்றுத் தேர்ந்த மாணவர்கள்

சிலம்பம் கற்றுக்கொள்ளும் மாணவிகள்

சிலம்பம் கற்றுக்கொள்ளும் மாணவிகள்

கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் நேரத்தை வீணடிக்காமல் பரமக்குடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், தமிழர்களின் பரம்பரிய கலையான சிலம்பத்தை கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.

    கொரோனா ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி பரமக்குடி பகுதி மாணவ, மாணவிகள் சிலம்பம் பயின்று வருகின்றனர். சக்தி சிலம்பாட்ட பயிற்சி மையம் நடத்தி வரும் தில்லை என்ற இளைஞர், பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிலம்பக் கலையை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மாணவர்களுக்கு, சிலம்பக் கலை புது உத்வேகத்தை கொடுத்துள்ளதாக கூறுகின்றனர் இங்கு பயிற்சிக்கு தங்களின் மகன், மகளை அழைத்து வரும் பெற்றோர்.

    சிலம்பம் பயிற்சி மீதான ஆர்வம் அதிகரித்த காரணத்தால், வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட செல்போன் மீது சிறுவர், சிறுமிகளின் கவனம் செல்வதில்லை என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். மேலும் சக்தி சிலம்பாட்ட பயிற்சி மையத்தில் சிலம்பம் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளிலும் சாதித்து பதக்கம் வென்றதாக பெருமிதத்துடன் பயிற்சியாளராக பணியாற்றும் விஜய் கூறுகிறார்.

    ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால், என்ன செய்வது என்று தெரியாமல், தொலைக்காட்சி முன்பாகவே பொழுதைக் கழித்த மாணவ, மாணவிகள், தற்போது சிலம்பம் பயிற்சி எடுப்பதால் புத்துணர்வு பெற்றுள்ளனர்.

    படிக்க... Perambalur Farmars | கரும்பு அரவை காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்.. கோரிக்கை விடுக்கும் பெரம்பலூர் கரும்பு விவசாயிகள்

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கடந்த பல ஆண்டுகளாகவே அழிந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில், மாணவ, மாணவிகள் பலரும் சிலம்பம் விளையாட்டின் மீது ஆர்வம் காட்டியது, அடுத்த தலைமுறைக்கும் இந்த அரிய கலை சென்றடைய மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

    செய்தியாளர் : தமிழ்ச்செல்வன், ராமநாதபுரம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி