ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உயிரைப் பறித்ததா சிகரெட் பழக்கம்.. முதியவர் மரணம் கொலையா? விபத்தா? போலீஸ் விசாரணை

உயிரைப் பறித்ததா சிகரெட் பழக்கம்.. முதியவர் மரணம் கொலையா? விபத்தா? போலீஸ் விசாரணை

உயிரிழந்த வேல்முருகன்

உயிரிழந்த வேல்முருகன்

Ramanathapuram: சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடைய வேல்முருகன் படுக்கையில் சிகரெட் பிடித்தபடி தூங்கி விட்டாரா என போலீஸ் விசாரணை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராமநாதபுரத்தில் படுக்கையில் சிகரெட் பிடித்தால் நடந்த தீ விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு.

  ராமநாதபுரம் மாவட்டம்   பரமக்குடியில் உள்ள சேதுபதி நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாடி ஜன்னல் வழியே

  அதிகளவில் கரும்புகை  வந்துள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும்,

  தகவல் அளித்துள்ளனர். தகவல் பெற்ற மீட்புப்படையினர் விரைந்து வந்த பார்க்கும் போது வீடு முழுவதும் கரும்புகை  சூழ்ந்துள்ளது. அப்போது வீட்டின்  அறையில் படுக்கையில்  தீ எரிந்துகொண்டிருந்தது. அதில் தீயில் எரிந்த நிலையில் வேல்முருகன்(65) என்பவர் சடலமாக மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.

  மேலும் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் போலீசார் விசாரணையில்மதுரையைச் சேர்ந்தவர் சண்முகம் பிள்ளை மகன் வேல்முருகன் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பரமக்குடிக்கு வந்து  குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பிரேம் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்மகனின் மனைவி உமா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்  இந்நிலையில் காலையில் மகன் மருமகள் இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வேல்முருகன் மட்டும் தனியே வீட்டில் இருந்துள்ளார்.

  Also Read : நடுக்கடலில் கடத்தல் வேட்டை.. வேம்பார் பகுதியில் 20 கோடி மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது எப்படி?

  இந்நிலையில் வீட்டின் அறையில் உள்ள படுக்கையில் இருந்த  தீயில் சிக்கி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடைய வேல்முருகன் படுக்கையில் சிகரெட் பிடித்தபடி தூங்கி விட்டாரா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என சம்பவம் நடந்த வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் கைரேகை நிபுணர்கள் தடயவியல் துறையினர் ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்:  கு.தமிழ்ச்செல்வன் 

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Death, E Cigarettes, Police, Smoking