Home /News /tamil-nadu /

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆசிரியர் வகுப்பறையில் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கத்தோடு இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் தொடுவதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

    பெருமாள் கோவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இரண்டு ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இரண்டு ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் தலைமறைவான மற்றொரு ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த வாரம் 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் குழந்தை பாதுகாப்பு மையம் சார்பாக பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள் கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    அந்த முகாமில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிலர் கணித ஆசிரியரான பரமக்குடி மணி நகரில் வசித்து வரும் ஆல்பர்ட் பலவன் பாபு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் நரி குடியைச் சேர்ந்த ராமராஜ் என்பவரும் வகுப்பறையில் பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கத்தோடு இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் தொடுவதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

    Also Read:  ‘தமிழகம் வன்முறைக் களமாக மாறிவிடும்’ - நாம் தமிழர் கூட்ட விவகாரத்தில் திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை

    இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குழுவுடன் வந்து மேற்படி பள்ளியில் நேரடியாக விரைவில் விசாரணை செய்ததில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சமூக அறிவியல் ஆசிரியரான ராமராஜனை போலீசார் கைது செய்தனர் மேலும் தலைமறைவான கணித ஆசிரியரான ஆல்பர்ட் வல்லவன் பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி) 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், POCSO case, Police arrested, Sexual abuse

    அடுத்த செய்தி