ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘புக் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வா.. இல்லைன்னா மார்க் போட மாட்டேன்’- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

‘புக் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வா.. இல்லைன்னா மார்க் போட மாட்டேன்’- மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

பள்ளி ஆசிரியரை ஒருவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை,ஆசிரியர் மாணவியுடன் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல்,போலீசார் விசாரணை.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் பள்ளியின் அறிவியல் ஆசிரியராக பணியாற்றும் ஹபீப்  என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை  வாங்கிக்கொண்டு அவரது வீட்டில் பெற்றோர்  இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவிப்பதோடு அப்படி வர மறுத்தால் உனக்கும் மார்க் குறைவாக போட்டு தேர்ச்சி அடைய விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து பள்ளிமாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபோல பல மாணவிகள் தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்ததாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. பள்ளி ஆசிரியரை ஒருவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏடிஎஸ்பி லயோலா இக்னோசியஸ், முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்:  சக்கரை முனியசாமி

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Phone audio, School Teacher, Sexual abuse, WhatsApp Audio