'சாலை ஓரமாக சென்று மது அருந்துங்கள்,' அறிவுரை கூறிய போலீசாரை ஆயுதங்களை கொண்டு தாக்கிய இளைஞர்கள்
'சாலை ஓரமாக சென்று மது அருந்துங்கள்,' அறிவுரை கூறிய போலீசாரை ஆயுதங்களை கொண்டு தாக்கிய இளைஞர்கள்
போலீசாரை தாக்கிய இளைஞர்கள்
Ramanathapuram District: சாலையில் அமர்ந்து மது அருந்திய இளைஞர்கள், சாலை ஓரமாக சென்று மது அருந்துமாறு கூறிய போலீசாரை அரிவாள், சைக்கிள் செயின், உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ள சம்பவம் சாயல்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாயல்குடியில் இரவு ரோந்து சென்ற போலீசாரை பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 போலீசார் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே நரிப்பையூர் கடற்கரை பகுதியில் குற்றப்பிரிவு போலீசார் இரவு ரோந்து சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சாலையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சாலை ஓரமாக சென்று மது அருந்துமாறு இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதில் போலீசாருக்கும், சாலையில் மது அருந்தியவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சாலையில் மது அருந்திய இளைஞர்
இதையடுத்து சாலையில் மது அருந்திய இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வாள், அரிவாள், சைக்கிள் செயின், உள்ளிட்ட ஆயுதங்களால் இரண்டு போலீசாரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
சாலையில் மது அருந்திய இளைஞர்
இதில் காவலர்கள் வசந்த், லிங்கநாதன் படுகாயமடைந்து சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர்களை தாக்கியதாக அல்ரசீது, முகமதுமசூத், பிலால், முபாரக் அலி, சகுபர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : சர்க்கரை முனியசாமி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.