இலங்கை கடற்படை அட்டூழியம்.. ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு - வேதனையில் மீனவர்கள்

மீனவர்கள்

இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரட்டியடிப்பு

 • Share this:
  இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் மீனவர்களை இன்றும் விரட்டியடிப்பு பல லட்சம் சேதத்துடன் மீன் பிடிக்காமல் மீனவர் கரை திரும்பினர்

  மீன் இனப்பெருக்கம் தடை காலத்துக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் இந்திய எல்லைப் பகுதியில் தொடர்ச்சியாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வலைகளை சேதப்படுத்தியும் மீன்பிடிக்க விடாமல் மீனவர்களை விரட்டி அடித்து வருகின்றனர்.

  அதன் தொடர்ச்சியாக நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் வள துறையிடம் உரிய அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரட்டியடிப்பு ஒரு படகு கடலுக்கு சென்று வர 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை செலவாகும் இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் துடன் மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருக்கின்றனர்

  ராமேஸ்வரம் செய்தியாளர் : சேது குமரன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: