• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ராமேஸ்வரம் பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்நீர்.. காரணம் என்ன?

ராமேஸ்வரம் பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்நீர்.. காரணம் என்ன?

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

மீன்களின் இறப்பிற்கான முழுமையான காரணத்தை தெரிந்துகொள்ள ஏதுவாக கடல் நீர் மற்றும் கடல் மீன்களின் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ராமேஸ்வரம் அடுத்த வில்லூண்டி தீர்த்தம் கடல் பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்நீர்,  சிறிய மீன்கள்,செத்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள வில்லுண்டி தீர்த்தக்கரை கடற்பரப்பில் திடீரென கடல்நீர் வழக்கத்தைவிட பச்சை நிறமாக மாறியதுடன் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்நிலையில் பல்வேறு வகையான சிறிய வகை மீன்கள் கடலோரப்பகுதிகளில் கரை ஒதுங்குவதைக்கண்டு மீன்பிடி தொழிலையே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் அப்பகுதி மீனவர்கள் இந்நிலையைக்கண்டு மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்,  இதுகுறித்து மீன்வளக் உதவி இயக்குனர் காத்தவராயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது,  "கடந்த 11-ம் தேதி கீழக்கரை கடற்கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல் பகுதியில் கடல் நீர் பச்சை நிற வண்ணத்தில் காணப்பட்டது. சிறிய அளவு உள்ள மீன்கள் இறந்து கடற்கரையில் ஒதுங்கியது. மீன்களின் இறப்பிற்கு கடல் பாசிகளின் அதிக அடர்த்தி காரணமாக இருக்கக் கூடும்.

    Also Read:  கொரோனா தடுப்பூசியில் சாதனை! - 100 கோடி இலக்கை எட்டிய இந்தியா

    மீன்களின் இறப்பிற்கான முழுமையான காரணத்தை தெரிந்துகொள்ள ஏதுவாக கடல் நீர் மற்றும் கடல் மீன்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மண்டபம் மத்திய கடல் மீன்கள் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி தெரிவிக்கும்போது.  இது போன்ற நிகழ்வு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக்கு இடைப்பட்ட காலமாகிய செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிகழ்ந்து வருவதாக கூறினர். மேற்படி காலங்களில் காற்றின் வேகம் குறையும் சூழ்நிலையில் வெப்ப மாறுபாடு காரணமாக NOCTILUCA SEINTTILLANS எனும் பச்சைப்பாசி பகலில் பச்சையாகவும், இரவில் நீல வண்ணத்திலும் மின்னும் தன்மையுடையது.

    Also Read:  எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

    கடல் நீர் பெருகி மேல்மட்ட நீர் ஓட்டம் குறைவாக உள்ள நிலையில் கடற்கரையை ஒட்டி பரவுவதால் அப்பகுதியில் ஆக்சிஜன் அளவு குறைவதாலும், மேலும் பாசிகள் நீருக்கடியில் பவளப்பாறை பகுதியில் வசிக்கும் கிளி மீன், ஓரா, நகரை, விலாங்கு, சூடை உள்ளிட்ட மீன் இனங்களின் செவுள் பகுதியை அடைந்து விடுவதால் போதுமான சுவாசமின்றி மீன்கள் இறந்து விடுகின்றனர்.  ஓர் இடத்தில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் குணமுடைய மீன்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை .காற்றின் வேகம் துவங்கியதும் தானாக இவை ஓரிரு தினங்களில் நகர்ந்து சென்று விடும் என்றனர்.  எனவே மீனவர்கள் எந்தவித அச்சமும் கொள்ள வேண்டாம் அதுபோல மீன் பிரியர்கள் எந்த பயத்திற்கும் உள்ளாக வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

    செய்தியாளர் - வீரக்குமரன் பொன்னுசாமி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: