Home /News /tamil-nadu /

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது காவல்துறை வாகனத்தின்மீது ஏறி ஆட்டம் - இளைஞர்கள் அட்டகாசம்

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையின் போது காவல்துறை வாகனத்தின்மீது ஏறி ஆட்டம் - இளைஞர்கள் அட்டகாசம்

Youtube Video

ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜையின் போது இளைஞர்கள் காவல்துறை வாகனத்தின் மீது ஏறி ஆட்டம் போட்டனர்.

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரி வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் குத்தாட்டம் போடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இளைஞர்களின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

எம்.பியாகவும், எம்.எல்.ஏவாகவும் இருந்த மறைந்த தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை கடந்த அக்டோபர் 30-ம் தேதி நினைவு கூறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் 114வது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குருபூஜை விழா அக்டோபர் 30-ம் தேதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இங்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக சார்பில் அண்ணாமலை, எச் ராஜா, ஆர்கே சுரேஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு தேவர் நினைவிடத்துக்கு வந்த அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாதுகாப்பு பணிக்காக வந்த  காவல்துறை வாகனம் மற்றும் அரசு அதிகாரி வாகனத்தின் மீது ஏறி நின்று இளைஞர்கள் குத்தாட்டம் போட்டனர் .அதில் ஒருவர் அரசு வானத்தை வழிமறித்து காலை வைத்து ஆடும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உயர் அதிகாரிகளின் உத்தரவை மீற முடியாமல் போலீசார்கள் வேடிக்கை பார்த்தனர். இதேபோல, முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியின்போது சென்னையில் பெண் காவலருக்கு தொந்தரவு கொடுத்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Muthuramalinga Thevar

அடுத்த செய்தி