சாயல்குடியில் வேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் இரும்பு கம்பத்தில் மோதி ஒன்றன்பின் ஒன்று விழுந்ததில் 4 வாலிபர்கள் நிலை என்ன என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி- கமுதி சாலையில் நேதாஜி நகர் என்ற பகுதியில் நேற்று காலையில் இரண்டு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்த 4 வாலிபர்கள் சாலையின் ஓரத்தில் உள்ள வளைவுகளில் இரும்பு போர்டின் மீது மோதி பறந்தபடி விழுந்தனர். கீழே விழுந்த வாலிபர்களில் ஒருவர் எழுந்திருக்க முடியாத அளவில் இருந்த நிலையில் விபத்து குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்காமல் காயம்பட்ட இளைஞரை தூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாயல்குடி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி ஆய்வுகளை மேற்கொண்டு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் யார் அதில் காயம் அடைந்தவர்கள் எந்த மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: எம். சக்கரை முனியசாமி (கமுதி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.