Home /News /tamil-nadu /

கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் செயின் பறிப்பு: சிசிடிவில் பதிவான காட்சிகள்!

கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் செயின் பறிப்பு: சிசிடிவில் பதிவான காட்சிகள்!

செயின் பறிப்பு

செயின் பறிப்பு

பைக்கில் வந்த இரு இளைஞர்கள்  ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதில், அப்பெண் தவறி கீழே விழுந்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சல் இடவே அறுபட்ட செயினை கீழே போட்டு விட்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச்சென்றனர்.

மேலும் படிக்கவும் ...
    பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை டூவீலரில் வந்து பறிக்க முயன்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி  கிரி அம்பலம் நாராயணன் தெரு பகுதிகளில் இளைஞர்கள் செல்போன் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் இருந்த போது மாலை நேரத்தில் கிரி அம்பலம் நாராயணன் தெருவில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தெரு முக்கு அருகில் அவர்கள் வந்தபோது,  பைக்கில் வந்த இரு இளைஞர்கள்  ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர். இதில், அப்பெண் தவறி கீழே விழுந்துள்ளார். பின்னர் அக்கம்பக்கத்தினர் கூச்சல் இடவே அறுபட்ட செயினை கீழே போட்டு விட்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச்சென்றனர்.


    மேலும் படிக்க: நண்பர்கள் தினத்தன்று சோகம்:3 நண்பர்கள் தற்கொலை முயற்சி-ஒருவர் உயிரிழப்பு!


    அவர்களை சிலர் துரத்தி பிடிக்க முயன்றபோது, இளைஞர்கள் அகப்படாமல் தப்பி சென்றனர். இந்நிலையில், இளைஞர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது, தப்பி சென்றது ஆகிய காட்சிகள்  தெருமுனையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சியின் அடிப்படையில் பரமக்குடி நகர் காவல் துறையினர்  இளைஞர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

    இதையும் படிங்க: காரில் ‘வருமான வரித்துறை’ பெயர் பலகையுடன் கஞ்சா கடத்தல் பெண் உட்பட இருவர் கைது!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Chain Snatching, Crime | குற்றச் செய்திகள், Ramanathapuram

    அடுத்த செய்தி