• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசு கொடுத்த பட்டா இருக்கு ஆனால் நிலம் எங்கே?: 20 ஆண்டுகளாக தவிப்பதாக சீர்மரபினர் சமூதாய மக்கள் வேதனை!

அரசு கொடுத்த பட்டா இருக்கு ஆனால் நிலம் எங்கே?: 20 ஆண்டுகளாக தவிப்பதாக சீர்மரபினர் சமூதாய மக்கள் வேதனை!

20 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டாவை காட்டும் மக்கள்

20 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டாவை காட்டும் மக்கள்

அரசு அதிகாரிகள் அவ்வப்போது வந்து நிலம்  அளக்க  பணம் பெற்றுக் கொண்டு நிலத்தை அளந்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள்  குற்றச்சாட்டு  தெரிவித்தனர்.

  • Last Updated :
  • Share this:
    20 ஆண்டுகளுக்கு முன்பு  கொடுக்கப்பட்ட  பட்டா இருக்கு ஆனால் நிலம் எங்கே என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளித்தது. மேலும்  நிலம் வழங்கப்படவில்லை என்றால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.   

    ராமநாதபுரம் மாவட்டம் அக்கிரமேசி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள்  குடும்பத்துடன்   வசித்து வருகின்றனர். சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளதால் அவர்களுக்கு தமிழக  அரசு விதிகளுக்கு உட்பட்டு வீட்டுமனை இடம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை  தொடர்ந்து கடந்த  2006ஆம் ஆண்டு மனு பரிசீலனை செய்யப்பட்டு அப்பகுதியில் சுமார்  17,84 ஏக்கர் நிலம் அரசு விலைக்கு வாங்கப்பட்டு சுமார்  350 சீர்மரபினர் குடும்பத்திற்கு 2014ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது.

    அரசின் சார்பில் வழங்கப்பட்ட பயனாளிகளிடம் பட்டா  உள்ளது. ஆனால் இன்னும் அதற்கான வீட்டு மனை ஒதுக்கி  கொடுக்கப்படாமல் கடந்த 20 ஆண்டு காலமாக காலம் தாழ்த்தி வருவதாகவும், அரசு அதிகாரிகள் அவ்வப்போது வந்து நிலம்  அளக்க  பணம் பெற்றுக் கொண்டு நிலத்தை அளந்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள்  குற்றச்சாட்டு  தெரிவித்தனர். இது தொடர்பாக பல முறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை என தெரிவித்து அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடுக்கப்பட்ட பட்டாவுடன்  அந்த இடத்தில் இறங்கி  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Also read:  பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!

    அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சாலையை மறித்து போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். உடனடியாக  சீர்மரபினர்களுக்கு நிலத்தைப் பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் தமிழக முதல்வரை சந்தித்து கோட்டையில் போராட இருப்பதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ராமநாதன்  கூறுகையில்,  “அக்கிரமேசி பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாய பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிலம் கொடுக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்டது ஆனால் நிலத்தை பிரித்து கொடுக்காமல் எப்படி வீடு கட்டுவது? அரசு அதிகாரிகள் தொடர்ச்சியாக அலட்சிய போக்கை கை விட வேண்டும். மேலும் விடுபட்டவர்களுக்கு  பட்டாவுடன் நிலம் வழங்க வேண்டும் தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்தி சீர் மரபினர் சமூதாய பொதுமக்களுக்கு நிலத்தை ஒதுக்கி தர உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்ததார்.

    செய்தியாளர் பொ.வீரக்குமரன், ராமநாதபுரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: