• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ராமநாதபுரத்தில் கோயில் வழிபாடு தொடர்பாக பிரச்னை- காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய பூசாரி

ராமநாதபுரத்தில் கோயில் வழிபாடு தொடர்பாக பிரச்னை- காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய பூசாரி

Youtube Video

ராமநாதபுரம் மாவட்டத்தில், கோயில் பிரச்னையை விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை கோயில் பூசாரியே அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அனிச்சக்குடி கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வழிபாடு, பராமரிப்பு தொடர்பாக, இரு தரப்பினரிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரச்னை இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புதன்கிழமை அன்று, காளியம்மன் கோயிலுக்கு ஆர்.எஸ்.மங்கலம் அதிமுக ஒன்றியச் செயலாளர் நந்திவர்மன் வழிபடச் சென்றுள்ளார். அப்போது கோயிலில் இருந்த துரைராஜ் என்பவர், திருநீறு கொடுத்துள்ளார்.

    இந்தத் தகவல் அறிந்த அந்தக் கோயிலைச் சேர்ந்த மலைராஜ் என்பவர், கோபமடைந்து, துரைராஜிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு தகராறு ஆகியுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் சென்றுள்ளது.

    அதையடுத்து, சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், சம்பவம் குறித்து விசாரிக்க கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு மலைராஜ் இல்லாததால் அவரைத் தேடி மலைராஜ் வீட்டிற்கே சென்றுள்ளார்.

    அப்போது மலைராஜ் போதையில் இருந்துள்ளார்; விசாரணை தொடர்பாக இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த மலைராஜ் திடீரென அரிவாளால் சார்பு ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலையில் ஓங்கி வெட்டியுள்ளார். அதில் பலத்தவெட்டுக் காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டது. அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆய்வாளரை வெட்டிய மலைராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: