• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசு அப்படிதான் சொல்லும்.. கூடுதல் விலைக்கு தான் சரக்கு விற்போம்: டாஸ்மாக் ஊழியர் அடாவடி

அரசு அப்படிதான் சொல்லும்.. கூடுதல் விலைக்கு தான் சரக்கு விற்போம்: டாஸ்மாக் ஊழியர் அடாவடி

டாஸ்மாக் ஊழியர் அடாவடி

டாஸ்மாக் ஊழியர் அடாவடி

அரசு நிர்ணயித்த விலைதான் கொடுப்பேன் என்று  மதுபிரியர் ஒருவர் கூறியுள்ளார். அப்போது, டாஸ்மாக்  கடை பணியாளர் அரசாங்கம் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது என்று அடாவடியாக பேசியுள்ளார்.

  • Share this:
    அரசாங்கம் சொல்வதை  எல்லாம் கேட்க முடியாது என்றும்  கூடுதல் விலைக்கு தான் மதுவை விற்போம்  என்றும் கூறி டாஸ்மாக்  ஊழியர்கள் அடாவடியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து சம்பந்த ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.  விற்பனை செய்யப்படும் மதுவுக்கு ரசீது வழங்க வேண்டும் என்றும்  கூறியுள்ளதோடு, இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. எனினும், அரசின் உத்தரவை மீறி பெரும்பாலான மதுபானக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

    அந்த வகையில்,  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் எல்லைக்கு உட்பட்ட  திருவரங்கம் டாஸ்மாக் மதுபானக் கடையில்  கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. எனினும்,  அரசு நிர்ணயித்த விலைதான் கொடுப்பேன், அரசாங்கம் சொல்லி இருக்கிறது என்று  மதுபிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

    அப்போது, டாஸ்மாக்  கடை பணியாளர் அடாவடியாக பேசி அரசாங்கம் சொல்வதை எல்லாம் கேட்க முடியாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடன் சக ஊழியரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதது வீடியோ ஆதாரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

    மேலும் படிக்க: "ரவுடிகளின் ஜாதகம் உள்ளங்கையில்" - அசத்தும் மதுரை காவல்துறை!


    இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ,  அரசின் உத்தரவை பின்பற்ற தவறிய டாஸ்மாக் ஊழியர்களான சோலைராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

     

    செய்தியாளர்: தமிழ்ச்செல்வன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: