இலங்கை வசம் உள்ள கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.
ராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள தமுமுக பள்ளிவாசலில் நடைபெற்ற தெற்கு மண்டல புத்தாக்க பயிலரங்கம் கருத்தரங்கில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர், ராமநாதபுரத்தில் மீனவர்கள் தொடர்ந்து பல இடர்பாடுகளை சந்திந்து வருகின்றனர்.
தங்கச்சிமடம், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் சேதமடைவது இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு தொடர் நிகழ்வாக உள்ளது என்று கூறினார். மேலும், இந்தியா கடந்த மூன்று மாதங்களில் 250 கோடி டாலர்களை இலங்கைக்கு கொடுத்துள்ளது. மேலும், 22,500 கோடி தேவையெனவும் அந்நாடு கேட்டுள்ளது.
140 கோடி டாலர்களை சீனா இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இதற்காக துறைமகத்தின் 663 ஏக்கரில் 280 ஏக்கரை 99 ஆண்டுகளுக்கு குத்தகை விட இலங்கையிடன் சீனா கோரியுள்ளது. சீனாவை விட அதிகம் பணம் கொடுத்துள்ள மத்திய அரசு கச்சத் தீவை 99 ஆண்டுகள் குத்தகைக்கு கேட்டுப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: படிக்கட்டில் பயணம் செய்தவர்களை உள்ளே வரச் சொன்ன நடத்துனர்'... ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்
இதேபோல், இந்தியை தமிழகத்தில் திணிப்பதற்காக அமித்ஷா இந்தி பற்றிய கருத்தை கூறியதை ஸ்டாலின் கண்டித்துள்ளார். நாட்டை வேறுபடுத்த மத்திய அரசு இறங்கியுள்ளது. ஒருபோதும் இந்தியை தமிழகத்தில் நுழைக்க கூடாது. தமிழக மீனவர்களை பொறுத்தவரை மெத்தன போக்காக மத்திய அரசு கையாளுகிறது.
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தமிழர்கள் வருவது அதிகரித்துள்ளது. தமிழக அரசு தொப்புள்கொடி உறவை இன்முகத்தோடு வரவேற்று அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருவது பாராட்டுக்குரியது என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
செய்தியாளர்: வீர குமரன் - ராமநாதபுரம்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.