Home /News /tamil-nadu /

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம்

நாளையும் நாளை மறுநாளும் கோவிலுக்கு செல்ல முடியாது என்பதால்,  இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கொரோனா தொற்று காரணமாக மகாளய அமாவாசை அன்று ராமேஸ்வரத்துக்கு வருவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

    புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்கு அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் கூடுவர். குறிப்பாக,ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை  ஆகிய தினங்களில்  நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

    கொரோனா பெருந்தொற்று ஆபத்து முழுமையாக விலகாததால் பண்டிகை காலங்களை எச்சரிக்கையுடன் கொண்டாடும்படி மத்திய, மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஆண்டு
    நாளை மாலை முதல் நாளை மறுநாள் புதன்கிழமை வரை மகாளய அமாவாசை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சாமி தரிசனம் செய்யவும், பக்தர்கள்  கடற்கரையில் புனித நீராடவும் தடை விதித்துள்ளது.

    இதையும் படிங்க: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்!


    நாளையும் நாளை மறுநாளும் கோவிலுக்கு செல்ல முடியாது என்பதால்,  இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் கொரோனா நோய் தொற்று  பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Mahalaya Amavasai, Ramanathapuram

    அடுத்த செய்தி