பரமக்குடியில் நிவாரணப் பொருட்களை வாங்க சமுக இடைவெளியை மறந்து பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 730 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கலைஞரின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முகைதீன் நிசபர் அலி மற்றும் சண்முகம் ஆகியோர் இணைந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தனர்.
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் தலைமையில் பரமக்குடி அப்துல்கலாம் பள்ளியில் நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் நிவாரணப் பொருட்களை வாங்க ஆர்வத்துடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக முண்டியடித்து வாங்க முயற்சித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அங்கிருந்தவர்களுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில் தொற்று பரப்பும் விதமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.இதனால் மீண்டும் தொற்று பரவும் அபாயத்தில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.