Ramanathapuram | வானம் பார்த்த பூமியாக ராமநாதபுரம், சிறுகுடி கிராமம்... ஊரை காலி செய்த மக்கள்...

Youtube Video

ராமநாதபுரம் அருகே குடிநீரின்றி தவித்த கிராமத்துக்கு, பக்கத்து கிராமம் தாகம் தீர்த்து வருகிறது. தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைந்த கிராம மக்கள், சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

  • Share this:
    வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கும் இப்பகுதி ராமநாதபுரம் மாவட்டம் சிறுகுடி. குடிநீர், சாலை, கழிப்பிடம் என எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், சுமார் 60 குடும்பங்கள் ஊரை காலி செய்துவிட்டு, வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துவிட்டனர். காவிரி கூட்டுக்குடிநீர் கடந்த 5 ஆண்டுகளாக வராததால், தண்ணீருக்காக தவம் கிடந்தனர் சிறுகுடி பகுதிவாசிகள்.

    ஊரணியில் உள்ள நீரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியதால், தள்ளுவண்டிகளில் குடங்களுடன் பக்கத்து கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். வேலாங்குளம், சோழந்தூர், நாரண மங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீரை தேடி அலைந்தனர்.

    மேலும் படிக்க... கல்பாக்கம் அணுமின்நிலைய விஞ்சானி சடலமாக மீட்பு... கொலையா? தற்கொலையா? விசாரணையில் போலீசார்..

    இதற்கிடையே, நாரணமங்கலம் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காளிமுத்தன், கிராம மக்கள் உதவியுடன், வேலாங்குளத்தில் உள்ள பொதுக் கிணறை தூர்வாரி, அப்பகுதிக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்தார். இதையறிந்த சிறுகுடி பகுதிவாசிகள், தங்கள் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பின்னர் சிறுகுடி கிராமத்துக்கு, வேலாங்குளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் குழாய் போடப்பட்டு, தற்போது குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சிறுகுடி கிராமத்துக்கு தினமும் ஐந்தாயிரம் லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது. குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைந்த கிராம மக்கள் தற்போது வீட்டின் அருகேயே குடிநீரை பெறுவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குடிநீர் திண்டாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த நாரணமங்கலம் பஞ்சாயத்துக்கு தலைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.



    இந்நிலையில், தங்கள் கிராமத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்கு தண்ணீர் வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக, வேலாங்குளம் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குடிநீர், சாலை உட்பட அனைத்து வசதிகளையும் முழுமையாக செய்துதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, சிறுகுடி பகுதி மக்களின் கோரிக்கை ஆகும்.
    Published by:Vaijayanthi S
    First published: