கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம் போன்றோர் இருக்கும் வரை அதிமுக அழிவை எதிர்நோக்கும் - சசிகலாவிற்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் அறிக்கை!

சசிகலா

கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் என்று கூறி கொண்டு இந்த மாபெரும் இயக்கத்தை அழித்திட  கே.பி. முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றோர் இருக்கும் வரை அதிமுக அழிவை எதிர்நோக்கும்.

  • Share this:
    சசிகலாவின் தலைமையின்கீழ் அதிமுகவை மீட்டெடுப்பதே தொண்டர்களின் விருப்பம் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் கண்டன அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. 

    ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும்  தற்போது மாநில எம்.ஜி.ஆர்.கழக துணைச் செயலாளருமான சோமாத்தூர் சுப்பிரமணியம்  கண்டன அறிக்கையை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வைரலாக பரவி வருகிறது.

    இந்த அறிக்கையில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி கட்டிக்காத்த அதிமுகவை இரட்டை தலைமையின் கீழ் கொண்டு சென்று ஆளுங்கட்சியாக இருந்த மாபெரும் இயக்கத்தை எதிர்க்கட்சியாக மாற்றிய பெருமை கொண்ட தகுதியற்ற அமைச்சர்கள், தகுதியற்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்களை அரவணைத்து செல்ல முடியாத மாவட்ட செயலாளர்கள், பணம் மட்டுமே சம்பாதிக்க கட்சியில் உள்ள ஒன்றிய செயலாளர்களை உடன் வைத்துக்கொண்டு கழகத் துணை ஒருங்கிணைப்பாளர் என்று கூறி கொண்டு இந்த மாபெரும் இயக்கத்தை அழித்திட  கே.பி. முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் போன்றோர் இருக்கும் வரை அதிமுக அழிவை எதிர்நோக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. பரமக்குடி தொகுதியை பொறுத்தவரை எப்பொழுதும் அதிமுக கோட்டையாக இருந்து வந்தது அதனை பெரும் ஓட்டையாக மாற்றிவிட்டார் தோல்வியடைந்த எம்எல்ஏ சதன் பிரபாகர்.  இதற்கெல்லாம் காரணம் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் செல்வாக்கை பயன்படுத்தி சீட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

    சோமாத்தூர் சுப்பிரமணியன்; முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில எம்ஜிஆர் கழக துணைச் செயலாளர்.


    எல்லோரையும் அரவணைத்து கொண்டு செல்லாத காரணத்தால் தென்மாவட்டங்களில் தோல்வியடைந்து வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம் அதை வைத்து ஆட்சி ஆள முடியாது கட்சியை மட்டும் காப்பாற்றலாம்.

    Also Read:   உயிர் வாழ முடியாத கிரகமாக வீனஸ் மாறியது ஏன்?

    கட்சியை வைத்து அவர்களுக்கு லாபம் சம்பாதிக்கலாம் தவிர மாநிலத்தில் இருக்கின்ற தொண்டர்களை காப்பாற்ற முடியாது.
    ஆகையால் கழகத் தொண்டர்கள் அனைவரும் இணைந்து அதிமுக இயக்கத்தை மீட்டு தியாகத் தலைவி சின்னம்மாவின் தலைமையின் கீழ் கட்சி ஒன்றுபட்டு ஒற்றை  தலைமையின் கீழ் கொண்டு செல்ல வேண்டுமென்று தொண்டர்களின் விருப்பமாக உள்ளதாக கண்டன அறிக்கையை வெளியிட்டு கூறினார்.

    பரமக்குடி செய்தியாளர் கு.தமிழ்ச்செல்வன்
    Published by:Arun
    First published: