• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ராமநாதபுரத்தில் கொரோனா காலத்தில் சேவை செய்த செவிலியர்- 19 கிராமம் ஒன்று சேர்ந்து எடுத்த பாராட்டு விழா

ராமநாதபுரத்தில் கொரோனா காலத்தில் சேவை செய்த செவிலியர்- 19 கிராமம் ஒன்று சேர்ந்து எடுத்த பாராட்டு விழா

Youtube Video

ராமநாதபுரம் அருகே கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை செய்த செவிலியருக்கு 19 கிராம மக்கள் இணைந்து பாராட்டு விழா நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் ஊராட்சிக்குட்பட்ட 19 கிராம மக்களும் திருவெற்றியூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சேவை பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது இந்த ஊராட்சியில் கடுமையான நோய் தொற்று பரவும் அச்சம் இருந்து வந்தது.

    இதனையறிந்த ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கவிதா, ஒவ்வொரு வீடாக சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டார். கிராம மக்களுக்கு கசாயம் வைத்து கொடுத்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இதனால் திருவெற்றியூர் பகுதியை சுற்றியுள்ள 19 கிராமங்களிலும் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் காப்பாற்றப்பட்டு அப்பகுதி மக்கள் மன நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கொரோனா காலத்தில் அளப்பரிய சேவையாற்றிய செவிலியர் கவிதாவுக்கு ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களும் இணைந்து பாராட்டு விழா நடத்தினர். அப்போது, செவிலியர் கவிதாவுக்கு "மக்கள் சேவகி கவிதா" என்ற விருதை வழங்கி கவுரப்படுத்தினர்.

    தனது சேவையை பாராட்டி விருது வழங்கிய கிராம மக்களுக்கு இன்னும் நிறைய சேவையாற்ற விரும்புவதாக செவிலியர் கவிதா மகிழ்ச்சி தெரிவித்தார்.

    கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் நோய்வாய்ப்பட்டாலும் உடனடியாக தகவல் அறிந்து அங்கு சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வரும் செவிலியர் கவிதாவை சுகாதாரத் துறையினரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: