Home /News /tamil-nadu /

நெருங்கும் ரமலான்... பரமக்குடி வாரச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

நெருங்கும் ரமலான்... பரமக்குடி வாரச்சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

ஆடுகள் விற்பனை

ஆடுகள் விற்பனை

Paramakudi: பரமக்குடி வாரச்சந்தையில் மொத்தம், 7,000 ஆடுகள் விற்பனையானதில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாரச்சந்தையில் ரூபாய் ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.  பரமக்குடியில் வியாழக்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக வாரச்சந்தை களை இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில், ரமலான் பண்டிகையை நெருங்குவதால் இன்று கூடிய வாரச்சந்தையில், பார்த்திபனூர், சத்திரக்குடி, முதுகுளத்தூர், பீர்க்கன்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார்  7,000 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதையும் படியுங்கள் | தேசிய ஹாக்கி போட்டியில் விளையாடும் தமிழக வீராங்கனைகள்... சாதனை படைக்க ஆட்சியர் வாழ்த்து

    இதற்கு முன் கிடா 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையான நிலையில், இன்று ஆடு ஒன்றுக்கு, 500 முதல், 2,500 ரூபாய் வரை விலை உயர்வு காணப்பட்டது. அதன்படி, ஒரு ஆடு 15,000 ரூபாய் முதல், 26 ஆயிரம் ரூபாய் வரைக்கும், ஆட்டுக்குட்டிகள், 4,500 முதல், 6,000 ரூபாய் வரைக்கும் விற்பனையானது.



    மொத்தம், 7,000 ஆடுகள் விற்பனையானதில், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் ஒருசிலர் வாங்காமல் ஏமாற்றத்துடன் சென்றனர். பரமக்குடி வாரச் சந்தையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    செய்தியாளர்:  கு.தமிழ்ச்செல்வன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Paramakudi Constituency, Ramanathapuram, Ramzan

    அடுத்த செய்தி