Home /News /tamil-nadu /

பெண்களின் உள்ளாடைகளை திருடி உல்லாசம்.. சைக்கோ திருடனின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி

பெண்களின் உள்ளாடைகளை திருடி உல்லாசம்.. சைக்கோ திருடனின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி

சைக்கோ திருடன்

சைக்கோ திருடன்

Ramanathapuram : பெண்களின் உள்ளாடைகளை திருடும் சைக்கோ இளைஞனை கைது செய்யுமாறு பரமக்குடி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பரமக்குடி பகுதியில் பெண்கள் உள்ளாடைகளை திருடும் சைக்கோ திருடனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் உள்ளது பகத்சிங் ரோடு இதற்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் பல வருடங்களாக பயன்படுத்தப்படாத ஒரு பாழடைந்த கட்டிடம் உள்ளது.

    இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதியில் தினமும் உலா வரும் சைக்கோ இளைஞர் அங்கு கொடிகளில் காயம் பெண்கள் உள்ளாடைகளை சேகரித்து சென்று வந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் தினமும் உலா வரும் சைக்கோ இளைஞனை பின்தொடர தொடங்கியுள்ளனர்.

    அப்போதுதான் அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது தினமும் பெண்களின் உள்ளாடைகளை திருடிச் செல்லும் அந்த சைக்கோ இளைஞர் அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் அந்த உள்ளாடைகளை சேகரித்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த சைக்கோ இளைஞர் தான் திருடி வந்த பெண்கள் உள்ளாடைகளுடன் உல்லாசமாய் இருந்து வந்ததும் மேலும் அந்த பாழடைந்த கட்டிடத்தில் உள்ள சுவர்களில் பெண்களை ஆபாசமாக வரைந்து அதன் மூலம் சுய இன்பம் பெற்று வந்ததும் தெரியவந்தது.

    Also Read: முன்னாள் எம்.எல்.ஏ. மகன் மர்மமான முறையில் இறப்பு - உடலைக் கைப்பற்றி போலீஸ் விசாரணை

    இந்நிலையில் அந்த சைக்கோ இளைஞன்  பெண்களின் உள்ளாடைகளை எரித்துவிட்டு மீண்டும் உள்ளாடைகளை திருடிக்கொண்டு வந்து அதனுடன் உல்லாசமாய் இருந்து வந்ததும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரவு நேரங்களில் வீதியில் வரும் பெண்கள் முன்னால் தனது ஆடைகளை கழட்டி நிர்வாணமாக நின்று அவர்களை உல்லாசத்துக்கு அழைத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த குடியிருப்புவாசிகள் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    Also Read:  மாயமான சிறுவன் பீரோவில் சடலமாக மீட்பு : கொடூர தம்பதியின் பகீர் வாக்குமூலம்

    காவல்துறையினர் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறு குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் அந்த சைக்கோ இளைஞரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி அங்கு வசித்து வரும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Ramanathapuram, Thief, Underwear Mistakes

    அடுத்த செய்தி