பரமக்குடி பகுதியில் முன் அறிவிப்பில்லாத மின் தடையால் பொதுமக்கள் கடுமையாக அவதிபடுகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் உள்ள முப்பத்தி ஆறு வார்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கல்வி, தொழில் சம்பந்தமாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் பரமக்குடி நகர் பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். பரமக்குடி நகர் முழுவதும் இரவு நேரங்களில் சுமார் மூன்று முதல் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக அறிவிப்பு இல்லாமல் மின்தடை ஏற்பட்டு வருகிறது இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
தற்போது பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் இருளில் படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் தினசரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் முன் அறிவிப்பில்லாத தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர். மேலும் காலை நேரங்களில் மின்சாரத்தை நம்பி தொழில் செய்யும் தொழிலாளிகள், தொழிலகங்கள் ஆகியவை அறிவிப்பில்லாத மின்வெட்டு காரணமாக பெரும் பாதிப்படைந்து நஷ்டம் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து பரமக்குடி உட்கோட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டபொழுது எந்த ஒரு தகவல் அளிக்காமல் அலட்சியப் போக்கில் இருப்பதாக கூறப்படுகின்றது.
உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கவனத்தில் கொண்டு மின்சாரத்தை சீராக வழங்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.