தனியார் பள்ளி ஆசிரியையை செருப்பால் அடித்து உதைத்த காவலர்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

தனியார் பள்ளி ஆசிரியை செருப்பால் அடித்து உதைத்த காவலர்!

தனியார் பள்ளி ஆசிரியையை காவலர் ஒருவர் செருப்பால் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அய்யனார் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், லதா தம்பதியினர். இவர்களது மகன் தினேஷூக்கும் மதுரையைச் சேர்ந்த வினோதினி என்ற பெண்ணுக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

  இந்நிலையில் இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் இருவரும் மதுரையில் வசித்து வந்துள்ளனர். லதா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரையில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டை வினோதினி தன் கணவரிடம் கேட்டு பிரச்சனை செய்து வந்துள்ளார்.

  Also read: நள்ளிரவில் கறிக்கோழி கேட்ட போலீஸ் - போனை எடுக்காத கறிக்கடைக்காரருக்கு அடி உதை

  இதனால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு பிரிந்து உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வினோதினி மற்றும்  அவரது உறவினர் விருதுநகர் புதுப்பட்டியில் காவலராக பணிபுரியும் காவலர் கணேசன் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பரமக்குடியில் உள்ள லதாவின்  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

  பின்னர் தினேஷிடம் வலுக்கட்டாயமாக பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர். பின்னர் காவலர் லதாவையும் பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி ஆபாசமாக திட்டி மிரட்டியுள்ளார். அதற்கு லதா கையெழுத்து போட மறுக்கவே அவரை காவலர் செருப்பால் அடித்து உதைத்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதன் மூலம் தற்போது, அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து லதா பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் காவலர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை மற்றும் அவரது உறவினர்கள் அடித்து உதைத்த காவலரை கைது செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

  செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன்
  Published by:Esakki Raja
  First published: