வாக்கு வங்கிக்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறையில் வைத்திருக்கின்றனர்: இயக்குனர் கேந்திரன் முனியசாமி விமர்சனம்!

ஓங்காரம் திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான கேந்திரன் முனியசாமி

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள வன்கொடுமைச் சட்டத்தை பரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்தை இந்த ஓங்காரம் படத்தின் மூலம் அரசுக்கும், மக்களுக்கும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

 • Share this:
  பசும்பொன்னில் ஓங்காரம் திரைப்படத்தின் இயக்குனர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் ஓங்காரம் திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான கேந்திரன் முனியசாமி அப்படம் வெற்றி பெற வேண்டுமென பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.
  இவர் அய்யன், சேது பூமி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டம் பல சமுதாய மக்களை, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளது.

  Also Read:  ரூ.8 கோடி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சொந்தக்காரர் வெறும் ரூ.35,000 மின்சாரம் திருடி சிக்கினார்!

  மேலும் இந்த வன்கொடுமை சட்டத்தை பெரும்பாலும் காவல்துறை அதிகாரிகளே தவறாக பயன்படுத்தும் நிலை தமிழகத்தில் உள்ளது.

  ஓங்காரம் திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான கேந்திரன் முனியசாமி


  எனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும். மேலும் ஜாதி ஒழிப்பை காரணம் காட்டி  அரசியல் கட்சித் தலைவர்கள் ஜாதி ஒற்றுமையை முன்னெடுக்க மறுக்கின்றனர். எனவே இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள வன்கொடுமைச் சட்டத்தை பரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்தை இந்த ஓங்காரம் படத்தின் மூலம் அரசுக்கும், மக்களுக்கும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் தேவேந்திர குல வேளாளர்கள் சமுதாய மக்கள் பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் விரும்பாத இந்த சட்டத்தை அரசியல் காரணங்களுக்காகவும், வாக்கு வங்கிக்காக நடைமுறையில் வைத்துக்கொண்டு பல சமுதாயம் இளைஞர்களின் கனவுகள், லட்சியங்கள் ஏதோ ஒரு வகையில் பாதித்து வருவதால் இச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றார்.

  செய்தியாளர் சக்கரை முனியசாமி, கமுதி
  Published by:Arun
  First published: