• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா- பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை, ஜெயந்தி விழா- பசும்பொன்னில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது!

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை

பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 59வது குருபூஜை விழா  மற்றும் 114வது  ஜெயந்தி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

  • Share this:
    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் ஆலயத்தில்  இன்று காலை பிள்ளையாா் பட்டி   குருக்களின் யாகசாலை பூஜையுடன் முத்துராமலிங்கத்தேவரின் 59வது குருபூஜை விழா மற்றும் 114 ஜெயந்தி விழா இன்று ஆன்மீக விழாவுடன் துவங்கியது.

    தேசப்பற்றும், ஆன்மிகப் பற்றும் கொண்டவராக விளங்கிய முத்துராமலிங்கத் தேவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது அளவற்ற அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களில் முத்துராமலிங்கம் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலேயர்களின் வாய் பூட்டு சட்டம் போன்ற பல இன்னல்களை அவர் சந்தித்துள்ளார்.

    உக்கிரபாண்டியத்தேவர்- இந்துராணி அம்மாள் ஆகியோர்களுக்கு கடந்த 30.10.1908ம் ஆண்டு முத்துராமலிங்கத் தேவர் பிறந்தார். பின்னர் 30.10.1963ம் ஆண்டு பிறந்த தினத்தில் முத்துராமலிங்கத்தேவர் மறைந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நாள் அவரது ஜெயந்தி விழாவாகவும், குருபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இன்று தொடங்கியது.  அதிகாலை 5 மணி அளவில் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் தங்கவேல், சத்தியமூர்த்தி, பழனி ஆகியோர் முன்னிலையில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜை நடத்தினர்.

    இதையும் படிங்க: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாயை கடந்தது


    அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் குருபூஜை விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: