படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்.. போலீஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்திய ஓட்டுநர்..
படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்.. போலீஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்திய ஓட்டுநர்..
அரசுப்பேருந்து
Paramakudi | மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்வதை பார்த்த ஓட்டுநர் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு தலைமை காவலர் ஆனந்திடம் புகார் அளித்தார்.
பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு சென்ற மாணவர்கள் பயணம் மேற்கொண்டதால் நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி புகார் அளித்த ஓட்டுநர்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு பள்ளி மற்றும் அரசு தொழிற்பள்ளியில் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் கொடுக்கப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் படிப்பை முடித்துவிட்டு செல்லும் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதேபோல் நேற்று மாலை பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் கிராமத்துக்கு செல்லும் பேருந்தில் அதிகமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் சென்றனர். இதனைப் பார்த்த ஓட்டுநர் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு தலைமை காவலர் ஆனந்திடம் புகார் அளித்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் பேருந்தில் தொங்கியவாறு சென்ற மாணவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை செய்து அறிவுரைகளை வழங்கி மாணவர்களின் பெயர் மற்றும் விலாசம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.
இனிமேல் இதே போல் நடந்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர். அப்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கூறுகையில் எங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி குறைவாக உள்ளதால் தினமும் இதே போல் தான் நாங்கள் செல்கிறோம் என்று கூறினார்கள் உடனடியாக இதை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.