Home /News /tamil-nadu /

புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் சேதம்.. மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்ப பெற்றோர் மறுத்ததால் பரபரப்பு..

புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் சேதம்.. மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்ப பெற்றோர் மறுத்ததால் பரபரப்பு..

Valanadu govt school

Valanadu govt school

Ramanathapuram district: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்

    புதிய அரசு பள்ளி கட்டிடம் மேற்கூரை இடிந்து  சேதம் அடைந்த நிலையில் பெற்றோர்கள்  தங்களது குழந்தைகளை பள்ளிக்கு  அனுப்ப மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்
    இந்த நிலையில் இந்த அரசு பள்ளிக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து ரூபாய் 1.கோடி 50 மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறை, தலைமையாசிரியர் அலுவலக கட்டிடம்  கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து பயன்பாட்டிற்கு வந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியர் வேறு வகுப்பறைக்கு சென்ற பொழுது  அறையின் மேற்கூரை இடிந்து திடீரென சரிந்து விழுந்ததால் தலைமையாசிரியர் உள்ளிட்ட யாருக்கும் பாதிப்பு ஏதும் நிகழவில்லை.
    இத்தகவல் அறிந்து அப்பள்ளியின் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைளுக்கு பாதுகாப்பு இல்லை என கருதி தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.

    சேதங்கள் உடனடியாக  சீரமைக்கப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என பள்ளி நிர்வாகம் உறுதி அளித்த நிலையில் தற்போது வரை சேதமடைந்த கட்டிடம் சீரமைக்கப்படாமல் இருப்பதை கண்டித்து  பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து உள்ளதால் ஆசிரியர் மட்டுமே பள்ளிக்கு வந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது.

    இது தொடர்பாக சுமூக உடன்படிக்கை ஏற்படும் வகையில் மாவட்ட  பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்,  பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    செய்தியாளர்: எம். சக்கரை முனியசாமி (கமுதி)
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி