முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நரிக்குறவர் இன மக்கள்.. அபாய நிலையில் உள்ள வீடுகளால் அல்லல்படும் அவலம்..

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நரிக்குறவர் இன மக்கள்.. அபாய நிலையில் உள்ள வீடுகளால் அல்லல்படும் அவலம்..

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நரிக்குறவர் இன மக்கள்.. அபாய நிலையில் உள்ள வீடுகளால் அல்லல்படும் அவலம்..

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நிலையில், வசிப்பிடமும் பாழடைந்துள்ளதால் பரிதவிக்கின்றனர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள்.. அபாய நிலையில் உள்ள வீடுகளால் அல்லல்படும் அவர்களின் அவலநிலை.

  • Last Updated :

ராமநாதபுரம் அருகே உள்ளது காட்டு ஊரணி, எம்ஜிஆர் நகர். இந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வானமே கூரையாக வாழ்க்கை நடத்தி வந்த இவர்களுக்கு, 1996 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு கால் நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில், வீடுகள் அனைத்தும் சிதிலமடையும் நிலையில் இருக்கின்றன. ஊரடங்கால் ஊசி, மணி, பாசி விற்கவும் வழியின்றி போன நிலையில், இவர்களது வாழ்வாதாரமும் இந்த வீடுகளைப் போலவே சேதாரமாகியுள்ளது. சோற்றுக்கே வழியின்றி தவிக்கும் மக்கள் தங்கள் வீடுகளைச் சீர்செய்ய முடியாமல் பரிதவித்து நிற்கின்றனர்.

' isDesktop="true" id="491853" youtubeid="o4Nv_jQsPaE" category="tamil-nadu">

அடிப்படை வசதிகள் ஏதுமற்ற அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியும் பல ஆண்டுகளைக் கடந்தும் காட்சிப் பொருளாகவே நின்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து எத்தனையோ முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என ஆதங்கப்படுகின்றனர் அப்பகுதி மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோramanathapuram செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் படிக்க... பதவி மீது என்றுமே எனக்கு ஆசை இல்லை: சசிகலா

சேதமடைந்துள்ள வீடுகளை அகற்றி விட்டு புதிய வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், சாதிச்சான்றிதழ் வழங்கி தங்கள் பிள்ளைகள் கல்வியறிவு பெற உதவ வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை அரசின் முன் வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

top videos

    தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் தங்களது கனவுகள் கைகூடும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் காட்டு ஊரணி மக்கள். நியூஸ் 18 தமிழ்நாடு செய்திகளுக்காக ராமநாதபுரம் செய்தியாளர் வீரக்குமரன்.

    First published:

    Tags: Ramanathapuram