ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்: நாகநாதன்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம்: நாகநாதன்

தற்போது நாகநாதன் சென்னை எக்மோர் அடுத்துள்ள சென்னை நகர் தனி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

 • Share this:
  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள கமுதியை சேர்ந்த காவலருக்கு கிராம மக்கள் மற்றும் காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  கமுதி அருகே சிங்கப்புலியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி மகன் நாகநாதன்(25). இவர் கமுதியில் அரசு உதவி பெறும் பள்ளியில் மேல்நிலை வகுப்பு வரை படித்துவிட்டு கமுதி கோட்டைமேடு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இவரது பெற்றோருக்கு மூன்று ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் இவர் இரண்டாவது மகன் ஆவார். இவரது தந்தை விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் தற்போது நாகநாதன் சென்னை எக்மோர் அடுத்துள்ள சென்னை நகர் தனி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 15 முதல் 19 வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டியில் 400 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

  இவர் அகில இந்திய அளவில் நடைபெற்ற போட்டிகளில் காவல் துறை சார்பிலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தடகள போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  Also read: காவல்துறையில் வேலை கிடைத்தாலயே ஒலிம்பிக்கிற்கு தேர்ச்சி பெற முடிந்தது - தடகள வீரர் நாகநாதன் உருக்கம்

  இந்நிலையில் டோக்கியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 400 மீ. ரிலே ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்க கமுதி சிங்கப்புலியாபட்டியை சேர்ந்த நாகநாதன் உள்பட தமிழக அளவில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் தேர்வாகியுள்ளதாக தமிழ்நாடு தடகள அசோஷியேஸன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  இதுகுறித்து நாகநாதன் கூறியதாவது.. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும், தனது கிராமத்திற்கும், தான் சார்ந்த தமிழ்நாடு காவல்துறைக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார். மேலும் இவருக்கு சிங்கப்புலியாபட்டி கிராம மக்கள், உடன் பணியாற்றும் காவலர்கள், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  செய்தியாளர் - எம். சக்கரை முனியசாமி.
  Published by:Esakki Raja
  First published: