Home /News /tamil-nadu /

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? - அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? - அமைச்சர் கூறிய முக்கிய தகவல்

ராஜகண்ணப்பன்

ராஜகண்ணப்பன்

Ramanathapuram : பொங்கல் பண்டிகையின் பரிசு தொகுப்பு பணமாக வழங்காமல் பொருட்களாக வழங்குவதால் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது என பரமக்குடியில், அமைச்சர் ராஜகண்ணப்பன் (Raja Kannappan) தெரிவித்துள்ளார்.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு போக்குவரத்து துறையில்  ஊழியர்கள் நிரப்பப்பட உள்ளனர். காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பை 20 மளிகை பொருட்கள் ஒரு கரும்பு அடங்கிய தொகுப்பை பரமக்குடியில் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கி, தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்களை பச்ச முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Read More : அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி எஸ்.ராமலிங்கம் வழக்கு

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சென்னையில் மட்டும் 2,800 பேருந்துகள் கேமரா பொருத்தப்பட்டு இயக்கப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு போக்குவரத்து துறையில்  ஊழியர்கள் நிரப்பப்பட உள்ளனர். காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

    Must Read : தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்... புதிய அறிவிப்பு வெளியாகிறது

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் விரைவில் கைது செய்வர். பொங்கல் பண்டிகையின் பரிசு தொகுப்பு பணமாக வழங்காமல் பொருட்களாக வழங்குவதால் மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது” என்று கூறினார்.

    செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி
    Published by:Suresh V
    First published:

    Tags: Pongal festival, Ramanathapuram, Transport

    அடுத்த செய்தி