முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழரசி எம்.எல்.ஏவின் கணவர் கழுத்தை நெரித்த திமுக நிர்வாகி - வீடியோ வைரல்!

தமிழரசி எம்.எல்.ஏவின் கணவர் கழுத்தை நெரித்த திமுக நிர்வாகி - வீடியோ வைரல்!

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

திமுக பொறுப்பில் உள்ளவர்கள் பொது இடத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட வீடியோ

  • Last Updated :

திமுக எம்எல்ஏவின் கணவரை திமுக நகர பொறுப்பாளர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் கணவர் ரவிக்குமாரை திமுக நகர் பொறுப்பாளர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 64 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜன், ராஜகண்ணப்பன் எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி, ராஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய போது முன்வரிசையில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசியின் கணவர் ரவிக்குமார் நின்றுகொண்டிருந்தார். அவரை பின் வரிசைக்கு வருமாறு பரமக்குடி வடக்கு நகர் பொறுப்பாளர் ஜீவரத்தினம் கூறியுள்ளார்‌.

தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு எம்எல்ஏவின் கணவரின் கழுத்தை நகர் பொறுபாளர் நெரிக்க முயன்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

tamilarasi ravikumar mla

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் திமுகவினர் முக கவசம் இன்றி, சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒருவருக்கொருவர் முண்டியடித்து சென்றனர்.

திமுக பொறுப்பில் உள்ளவர்கள் பொது இடத்தில் ஒருவருக்கொருவர் சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் , பரமக்குடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: DMK, News On Instagram, Paramakudi Constituency, Viral Video