கொங்குநாடு விவாதம்; மத்திய அரசும் முடிவு செய்யவில்லை, பாஜகவும் முடிவு செய்யவில்லை: எச்.ராஜா

கொங்குநாடு விவாதம்; மத்திய அரசும் முடிவு செய்யவில்லை, பாஜகவும் முடிவு செய்யவில்லை: எச்.ராஜா

பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டிக்குள் வந்தாள் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையும். இதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு தலைவராக லியோனியை நியமித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வர்  இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்தியா என்பது பாரதம் அது நிர்வாக வசதிக்காக மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட விஷயம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் அந்த ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் கருத்தினை மக்கள் மனதில் திணிப்பதற்காக ஏதோ இந்த மாநிலங்கள் சேர்ந்த ஒன்றியம் தான் இந்தியா என்பது மாதிரி முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பவர்கள் பேசுகின்றனர். இதற்கு எதிர்வினையாக கொங்குநாடு என்று சொல்லி ஒரு விவாதமானது துவங்கி இருக்கிறது. இதனை மத்திய அரசும் முடிவு செய்யவில்லை, பாஜகவும் முடிவு செய்யவில்லை. அப்படி இருக்கும் பொழுது, நீங்கள் பேசியிருப்பது தவறு, அது பிரிவினைவாத விதை என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என சிலர் இதுபோல செய்திருக்கலாம் என்றார்.

    தொடர்ந்து, பேசிய அவர், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்கு தலைவராக ஐ லியோனியை நியமித்திருப்பது திமுக-வில் சிறந்த கல்வியாளர்கள் இல்லை என திமுக ஒப்புக் கொண்டது போல் இருக்கிறது, அவரை தலைவராக நியமித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    Also read: கீழடிக்கு முந்தைய வரலாறு சிவகளை அகழாய்வின் மூலம் தெரிய வரும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

    பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டிக்குள் வந்தாள் பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறையும். இதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டினுடைய பிரதிநிதி ஜிஎஸ்டி கவுன்சிலிங்கில் போகக் கூடியவர், தமிழ் மக்கள் மீதும் தமிழகத்தின் மீதும் அக்கறை இருக்குமானால் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி கொண்டு வருகிறோம் என தெரிவித்தால் மத்திய அரசாங்கத்தை பற்றி பேசட்டும், இல்லை என்றால் உங்கள் அறியாமையை மக்களிடம் திணிக்க முயற்சி செய்தால் பாரதிய ஜனதா கட்சி தக்க பதிலடி கொடுக்கும் என்று அவர் கூறினார்.

    செய்தியாளர் - பொ.வீரக்குமரன்
    Published by:Esakki Raja
    First published: