முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பரமக்குடி சித்திரை திருவிழா : கள்ளழகர் நீலப் பட்டுடுத்தி பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்

பரமக்குடி சித்திரை திருவிழா : கள்ளழகர் நீலப் பட்டுடுத்தி பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்

பரமக்குடி சித்திரை திருவிழா

பரமக்குடி சித்திரை திருவிழா

Paramakudi sundararaja perumal temple : பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ  பூப்பல்லக்கில் கள்ளழகர் நீலக் கலர் பட்டு உடுத்தி வைகை ஆற்றில்  இறங்கினார் 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த  வாரம்  காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக பெருமாள் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது.

இதனையொட்டி அதிகாலை  பெருமாள் நீல நிற பட்டுடுத்தி  கள்ளழகர்  பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலில் இருந்து புறப்பட்டார். அதிகாலை 4 மணிக்கு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான  பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என கோ‌ஷமிட்டு கள்ளழகரை தரிசித்தனர்.

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்  பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி காட்சி தந்தார். தொடர்ந்து  காலை 8 மணிக்கு மேல் குதிரை வாகனத்தில்  கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சி  நடைபெற உள்ளது.

கள்ளழகர்

Must Read : மதுரை தேரோட்டம்: பக்தர்களின் வெள்ளத்தில் மிதந்து வரும் மீனாட்சி-சொக்கரின் புகைப்படங்கள்...

நீல நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கியதால் நாடு செழிக்கும் என கருதப்படுகிறது.

செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி

First published:

Tags: Kallazhagar, Ramanathapuram, Vaigai