• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிவேகமாக வந்த இனோவா கார்.. தடுப்புச்சுவரை தாண்டி விபத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்

அதிவேகமாக வந்த இனோவா கார்.. தடுப்புச்சுவரை தாண்டி விபத்து - வெளியான சிசிடிவி காட்சிகள்

கார் விபத்து

கார் விபத்து

அதிவேகமாக வந்த இனோவா கார் சாலையின் குறுக்கே இருந்த தடுப்புசுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

  • Share this:
    பரமக்குடி அருகே அதிவேகமாக வந்த கார்  மூன்று முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளான  சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சோமநாதபுரம்  நான்கு வழிச்சாலை விளக்கு பகுதியில் அதிவேகமாக வந்த இனோவா கார் சாலையின் தடுப்புசுவர் மீது மோதி மூன்று முறை பல்டி அடித்து விபத்துக்குள்ளானது. மதுரையைச் சேர்ந்த ஜான்சன்,முபாரக், பாண்டி,ஜீவா ஆகியோர் அழகன் குளம் அருகே உள்ள ஆத்தங்கரை மாதா கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டு மதுரைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

    Also Read: திருமண ஆசைக்காட்டி பெண்களுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டல் - கம்பி எண்ணும் மோசடி மன்னன்

    பரமக்குடி சோமநாதபுரம் நான்கு வழிச்சாலை விளக்குப் பகுதியில் கார் வந்து கொண்டிருக்கும் போது சாலையின் நடுவே ஆடு குறுக்கே வந்துள்ளது. ஆட்டின் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியுள்ளனர். அதிவேகமாக வந்த இனோவா கார் சாலையின் குறுக்கே இருந்த தடுப்புசுவர் மீது மோதி மூன்று முறை பல்டியடித்து சாலையின் வலது பக்கம் உள்ள தடுப்பு கம்பி மீது பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.

    கார் விபத்து


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 4 பேரும் உயிர் தப்பினர் ஓட்டுனர் மட்டும் லேசான காயங்களுடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து எமனேஸ்வரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.இனோவா கார்  மூன்று முறை பல்டி அடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்:  கு.தமிழ்ச்செல்வன் ( பரமக்குடி)



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: