கொரோனாவால் உயிருக்கு போராடிய பெண்; இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உதவியருக்கு குவியும் பாராட்டு!

கொரோனாவால் உயிருக்கு போராடிய பெண்; இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உதவியருக்கு குவியும் பாராட்டு!

கொரோனா பாதிக்கப்பட்ட பெண்

ராமநாதபுரம் அருகே  கொரோனா தொற்றால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டில் இருந்த பெண்ணை ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த ஊராட்சி செயலாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

  • Share this:

    ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பாரதிநகரை சேர்ந்தவர் முருகன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்,  அவரது மனைவி புனிதா மற்றும் 3 குழந்தைகள்  இங்கு வசித்துவரும் நிலையில், புனிதாவிற்கு கடந்த சில நாட்களாக அதிக காய்ச்சல் மற்றும் சளித் தொல்லை இருந்துவந்துள்ளது.

    இதையடுத்து,  2 தினங்களுக்கு முன்பு அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடைய வீட்டிற்கு இன்று மருத்துவர், மருத்துவ பணியாளர், பஞ்சாயத்து செயலாளர் ஆகியோர் பார்வையிடச்சென்றுள்ளனர். அப்போது, அந்த பெண் மூச்சுவிட முடியாமல் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    இதனையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்ஸூக்கு தொடர்புகொண்டுள்ளனர். தொடர்ந்து 2மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் உயிருக்கு போராடும் அந்த பெண்ணை காப்பாற்ற நினைத்த ஊராட்சி செயலாளர் விமல் சற்றும் யோசிக்காமல் தனது இருசக்கர வாகனத்தில் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்துள்ளார்.

    தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த அந்த பெண்மணிக்கு உடனடியாக  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிசிச்சையில் உள்ளார், தன்னலம் கருதாமல் உதவி செய்த ஊராட்சி செயலர் விமலின் இந்த செயலை  அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    செய்தியாளர் - வீரக்குமரன் பொன்னுசாமி

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: