முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தரமற்ற செயற்கைக்கால்.. மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பயனில்லை - வேதனையில் இளைஞர்

தரமற்ற செயற்கைக்கால்.. மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பயனில்லை - வேதனையில் இளைஞர்

அஜித் குமார்

அஜித் குமார்

செயற்கை கால் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஊனமுற்றோருக்கான அரசு வழங்கிய தரமற்ற செயற்கைக்கால் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இளைஞர் வேதனை தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார்(28). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த விபத்தில் தனது ஒரு கால் இழந்தார்.இந்நிலையில் ஒரு கால் இழந்த அஜீத் குமாரை அவரது முறைப்பெண்ணாண பவ்யா காதல் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் எட்டு ஆண்டுகளாக அக்கம்பக்கத்தில் கடன் பெற்று செயற்கையான மரக்கால் பொருத்தியுள்ளார்.இந்த மரக்கால் தற்போது முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே பல நாட்களாக அஜித்குமார் முடங்கி கிடக்கிறார்.

மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின் மூலம் கடந்த சில தினங்களுக்கு   முன்பு செயற்கை கால் வழங்கப்பட்டது. இந்த கால்  பயன்படுத்தி நடந்து செல்லும்போது காலில் முறிவு ஏற்பட்டு கீழே தவறி விழுந்தார் அப்போதுதான் தெரிந்தது தரமற்ற  செயற்கை கால் என்பது இதனை  பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது இதனை மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கில் நடந்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி கடந்த எட்டு ஆண்டுகளாக அஜித்குமாருக்கு மாநில அரசு மூலம் வழங்கப்படும் ஓய்வு ஊதியம்,வேலைவாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலம் என்பதால் வீட்டுக்கும் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார் இதுமட்டுமின்றி இவரது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமலும் கஷ்டப்பட்டு வருகிறார். தமிழக அரசு தன்னுடைய வாழ்வாதாரத்துக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என அஜித்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்: தமிழ்ச்செல்வன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Physically challenged, Tamilnadu