• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தவறு செய்தவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தவற மாட்டார்: அமைச்சர் சேகர் பாபு

தவறு செய்தவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தவற மாட்டார்: அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

அதே போல் சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் அபகரிக்கப்பட்ட 10 ஏக்கர் கோயில் நிலத்தை இன்று கைப்பற்றி இருக்கிறோம் என்றார்.

  • Share this:
    முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் சரி இன்னால் அமைச்சர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தவற மாட்டார் என்று பரமக்குடியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மீனாட்சி அம்மன் கோவிலில் மாதசம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சியர்கள், பூசாரிகள் 100க்கும் மேற்பட்டோருக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிவாரண பொருட்கள் 15 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் உதவித் தொகை 4 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதன் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு  முதல் முறையாக நிவாரணத் தொகை வழங்கியது திமுக ஆட்சியில்தான். அதை போல் பல்வேறு துறைகளில் கொரோனா கால உதவிக்காக வழங்கப்பட்டாலும் பணம் வழங்கபட்டாலும் 10 கிலோ அரிசி  15 வகையான மளிகைப் பொருள் வழங்குவது முதன் முதலில் இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் இதுதான் முதல் முறை எனக் கூறினார்.

    Also read: பெட்ரோல், டீசல் விலை விவகாரம்: திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி விட்டது; அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

    பின்பு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் குற்றச்சாட்டில் இன்று கைதானதையொட்டி தவறு யார் செய்தாலும் அவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் சரி இன்னால் அமைச்சர்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தவற மாட்டார் என்று விமோசனம் அளித்தார்.

    அதே போல் சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் அபகரிக்கப்பட்ட 10 ஏக்கர் கோயில் நிலத்தை இன்று கைப்பற்றி இருக்கிறோம். முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி இன்று சிவகங்கையில் இடங்களைப் பார்வையிட்டு வந்திருக்கிறோம் இடம் குறித்து விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. தவறு செய்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட நடவடிக்கை எடுக்க முதல்வர் கூறியிருக்கிறார். அதனால் சட்டத்தின் பிடியிலிருந்து அவர்கள் தப்ப முடியாது என்று கூறினார்.

    செய்தியாளர் - கு.தமிழ்ச்செல்வன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: