மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளின் திறமையை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் துபாயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர்கள் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றி வந்துள்ளனர்.
கொரோனா காலம் என்பதால் அவர்கள் பெற்ற கோப்பையை முழுமையாக வெளிப்படையாக காண்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு சிறந்த முறையில் விளையாடக்கூடிய வீரர்களுக்கு தமிழக அரசு அதற்கான பாராட்டும், வெகுமதிப்பையும் தரவேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பொதுவாக இந்திய கிரிக்கெட் அணி சார்பில் சராசரியாக விளையாடக்கூடிய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கூட கிடைக்கக்கூடிய மத்திய, மாநில அரசு சம்பளம், ஊக்கத்தொகை, சலுகை, மரியாதை, தனிநபர் கவுரவிப்பு முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அதற்கான செலவினங்கள், சம்பளம், ஊக்கத்தொகை சலுகைகள் ஊக்குவிப்பது இல்லை என தமிழக மாற்றுத் திறனாளிகள் அணி வீரர்கள் கவலை தெரிவித்தனர்.
இதனால், அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தனிநபர்களை மட்டுமே முழுமையாக நம்பி நாள்தோறும் எதிர்பார்த்து பரிதாபத்தோடு காத்திருந்து வருகின்றனர். அரசு தங்களின் வாழ்க்கை திறனை மேம்படுத்தி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் - பொ.வீரக்குமரன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.