ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மேலசத்திரம் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளுக்கு மாதந்தோறும் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், கடை நடத்துபவர்கள் கடந்த ஆறு வருட காலமாக வாடகை பாக்கி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்த கடைக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், நீங்கள் கட்ட வேண்டிய வாடகை பாக்கியை கட்டாவிட்டால் உங்கள் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரித்திருந்தனர். அதையும் பொருட்படுத்தாமல் இருந்த உரிமையாளர்கள் வாடகை பாக்கியை கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
Must Read : குமரி மீனவர்களின் படகை அத்துமீறி சிறை பிடித்த கேரள மீன்வளத்துறை அதிகாரிகள்
இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 10 கடைகளுக்கு மேல் சீல் வைத்தனர். மேலும், நீங்கள் செலுத்த வேண்டிய பாக்கி வாடகை தொகையை செலுத்தினால் உரிமையாளர்கள் கடைகளை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் : கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.