Home /News /tamil-nadu /

காவல்நிலையம் சென்ற மாணவர் உயிரிழந்த விவகாரம் : மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு

காவல்நிலையம் சென்ற மாணவர் உயிரிழந்த விவகாரம் : மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவு

ராமநாதபுரத்தில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று திரும்பிய கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் மறுபிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்  அருகே கீழத்தூவல் காவல் நிலையத்தில் போலீசார் மேலதூவல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த நீர்க்கோழியேந்தால் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் தனது நண்பரான சஞ்சயுடன்  முதுகுளத்தூர் வந்துள்ளார். போலீசார் இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் கல்லூரி மாணவன் மணிகண்டன் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த போலீஸார் அவரை பின்தொடர்ந்து சென்று விரட்டிபிடித்து மணிகண்டனை மட்டும் மேலதூவல் கிராமத்திலிருந்து அடித்தது காவல் நிலையதிற்கு விசாரணைக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது

    இதையடுத்து மாலை 6.30 மணிக்கு மணிகண்டனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு கல்லூரி மாணவன்  மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். நடக்க கூட முடியாமல் மணிகண்டனை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    வீட்டில் 3 முறை மணிகண்டன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இரவில் தூங்கிய நிலையில் காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடைந்துள்ளார். மணிகண்டனின் உடலை உறவினர்கள் சோதித்து பார்த்ததில் ஆண் உறுப்பில் வீக்கம் ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

    Also Read : மதமாற்றம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலால் கிறிஸ்துவ பள்ளி சூறையாடல்

    இதையடுத்து  போலீஸார் மணிகண்டனை அடித்துக் கொலை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.  மேலும் போலீசார் தரப்பில் இருந்து பாம்பு கடித்து இறந்திருக்கலாம் என விளக்கம் அளித்துள்ள நிலையில் அதை ஏற்க மறுத்த உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
    இதையடுத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து  சென்ற கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள், கிராமத்தினர் அரசு மருத்துவமனை வாயிலில் முதுகுளத்தூர்-  பரமக்குடி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

    இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கீழத்தூவல் காவல் ஆய்வாளர் லட்சுமி எஸ்பி தனிப்பிரிவு போலீசார் ஐயப்பன் காவலர்கள் செந்தில் பிரேம்குமார் லட்சுமணன் கற்பகம் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என மணிகண்டனை தம்பி அலெக்ஸ் பாண்டியன் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் மணிகண்டனின் தாய் ராமலட்சுமி இந்த சம்பவம் தொடர்பாக  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதுபதிகள், மணிகண்டன் மரணம் குறித்து உறவினர்களுக்கு சந்தேகம் இருப்பதால், மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். மேலும் மறு பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மறு பிரேத பரிசோதனை முடிந்தவுடன், மணிகண்டன் உறவினர்கள் உடலை பெற்று கொண்டு உரிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும். மணிகண்டன் இறப்பில் நீதி கிடைக்க வேண்டும். இதில் அரசியல் இருக்க கூடாது. பேரணி, ஊர்வலம் என சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி