ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே திமுகவினர் அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் கமுதி அருகே உள்ளது முத்துப்பட்டி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த திமுக அதிமுகவை சேர்ந்த சிலருக்கும் விருதுநகர் மாவட்டம் அம்மன் பட்டியைச் சேர்ந்த அதிமுக கட்சியை சேர்ந்த சிலருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இதனையடுத்து இன்று அம்மன் பட்டியைச் சேர்ந்த சிலர் முத்துப்பட்டி கிராம அதிமுகவைச் சேர்ந்த முத்து இருளாண்டி அவரது மகன் முத்துராமலிங்கம், கண்ணன் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதைத்தொடர்ந்து, காயம்பட்ட 3 பேரும் கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலத்த வெட்டு காயமடைந்த முத்துராமலிங்கம் ஆபத்தான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Also read: தி.மு.க ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்தில் மின்வெட்டு தலைவிரித்து ஆடுகிறது - அ.தி.மு.க குற்றச்சாட்டு
அதே போல் அம்மன்பட்டி திமுகவை சேர்ந்த பூச்சி என்ற ரவிகாந்த் மற்றும் மருது ஆகிய 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - சர்க்கரை முனியசாமி
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.