• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தல் பிரச்சாரத்தில் பறந்த சேர்கள்.. நாம் தமிழர் கட்சியினர் மீது அதிமுகவினர் தாக்குதல்

தேர்தல் பிரச்சாரத்தில் பறந்த சேர்கள்.. நாம் தமிழர் கட்சியினர் மீது அதிமுகவினர் தாக்குதல்

தேர்தல் பிரச்சாரத்தில் பறந்த சேர்கள்

தேர்தல் பிரச்சாரத்தில் பறந்த சேர்கள்

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மீது  அதிமுகவினர் சேர்களை எரிந்து தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

  • Share this:
    சத்திரக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் மீது  அதிமுகவினர் சேர்களை வீசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில்  வைரலாக பரவி வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்ட எழாவது வார்டு  ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு வருகின்ற ஒன்பதாம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதில் அ.தி.மு.க, தி.மு.க,  நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சத்திரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    அப்போது அவர்களது பிரச்சார மேடை அருகே திமுகவினர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அதிமுகவினரும் ஒலி பெருக்கி மூலம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர். இதனால் கோபம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் பரப்புரை செய்ய அனுமதி வழங்கிய காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Also Read:  ‘நீங்க தடுப்பூசி போடுங்க… நான் ஆடு மேய்க்கிறேன்…’- வைரல் மருத்துவரின் எக்ஸ்க்லூசிவ் பேட்டி!

    பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் பிரசார பொதுகூட்டம் நடந்த இடத்தில் நாம் தமிழர் கட்சியினர் மீது  அதிமுக வினர் சேர்களை எரிந்து தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்  உள்ளிட்ட சமூக வலைத்தளங்ளில் வைரலாக பரவி வருகிறது.மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக பிரச்சாரம் செய்த அதிமுகவினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது சத்திரக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: