ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி புதிய சாதனை படைத்த சிறுவர்கள்

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி புதிய சாதனை படைத்த சிறுவர்கள்

ஆந்திரா மாநில செய்திகள்

ஆந்திரா மாநில செய்திகள்

கடந்த 19ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த சிறுவன் ஒன்பது மணி நேரம் 40  நிமிஷம் கடந்து வந்து சாதனை படைத்திருந்தார் ஆனால் ஆந்திரா சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள்  9 மணி நேரம்  28 நிமிஷம் கடந்து இந்த 6 சிறுவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆந்திராவை சேர்ந்த 6 சிறுவர்கள் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வந்து புதிய சாதனை படைத்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட 6 சிறுவர்கள் நேற்றைய முன் தினம் ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் இலங்கை தலைமன்னாருக்கு புறப்பட்டு தலைமன்னாரில் இருந்து அதிகாலை 1 மணியளவில் 6 பேரும் ஒன்றாக இணைந்து நீந்த ஆரம்பித்து நேற்று காலை 10:28  மணி அளவில் தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.

கடந்த 19ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த சிறுவன் ஒன்பது மணி நேரம் 40  நிமிஷம் கடந்து வந்து சாதனை படைத்திருந்தார். ஆனால் ஆந்திரா சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள்  9 மணி நேரம்  28 நிமிஷத்தில் கடந்து இந்த 6 சிறுவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

ஆந்திராவைச் சேர்ந்த 6 சிறுவர்கள் நீந்துவதை கண்காணிக்க தமிழ்நாட்டு நீச்சல் பயிற்சியாளர் மதுரையை சேர்ந்த கண்ணன் உடன் சென்றார். மேலும் நீந்தி வந்த சிறுவர்களை ராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் நாசர் கான் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் துணைச் சேர்மன் மற்றும் இவர்களுடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவ கூட்டமைப்பு பொதுச் செயலாளர் என்.ஜே போஸ்  ஆறு சிறுவர்களுக்கும் சால்வை அணிவித்து மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.

செய்தியாளர் : சேது குமரன்

First published:

Tags: Andhra Pradesh