சென்னை போன்ற பெரு நகரங்களில் நடக்கும் டூவீலர் சாகசங்கள் தற்போது கிராமப்புறங்களையும் விட்டுவைக்கவில்லை, இதனை போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
டெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட விஷேச நாட்களில் டூவீலரில் இளைஞர்கள் சாகசம் காட்டுவதும், குடித்துவிட்டு நண்பர்களுடன் கும்பலாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பதும் வழக்கம். அதிக வேகமாக சென்று ஸ்டண்ட் அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு விபத்தில் சிக்குகின்றனர்.
இதனை தவிர்க்க போக்குவரத்து போலீசார் பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து கிராமப்புறங்களிலும் டூவீலர்களில் சாகசம் செய்யும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
Also read: பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவிலில் இருந்து இராமநாதபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் டூவீலரில் இளைஞர்கள் சாகசம் செய்தபடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதில் இருவர் மட்டுமே செல்ல வேண்டிய டூவீலரில் மூவர் அமர்ந்து மது போதையில் டூவீலர் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். சுமார் 10 இருசக்கர வாகனங்களில் கும்பலாக பயணிக்கும் அந்த இளைஞர்கள் மது போதையில் சாலையில் சீராக வாகனத்தை இயக்காமல், அங்கும் இங்கும் வாகனத்தில் செய்யும் அலப்பறைகளால் பிற வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர். அதில் ஒரு இளைஞர் உற்சாகமிகுதியால் பிரேக்கில் இருந்து காலை எடுத்து வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது காலை வைத்தபடி வாகனத்தை இயக்குகிறார். இது போல வாகனங்களில் செல்பவர்களால் சாலையில் நடந்து செல்வோரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
Also read: கொரோனா வார்டில் படுகர் இன மக்களின் பாரம்பரிய இசையுடன் நடனமாடி அசத்தும் செவிலியர்!
பெருநகரங்களில் நடக்கும் இதுபோன்ற சாகசங்கள் தற்போது இளைஞர்கள் மது போதையில் கிராமப்புறங்களிலும் திருவிழாக்கள் உள்ளிட்ட சமயங்களில் இதுபோன்று ஈடுபட்டு வருவதால் விபத்தில் சிக்குகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுபோன்ற சம்பவங்களால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்குள், தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன், பரமக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.