பரமக்குடியில் 12 வயது சிறுவன் சேமித்து வைத்த உண்டியல் பணத்தில் இலவசமாக முகக்கவசம் வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 12 வயது சிறுவன் தனது சேமிப்பு பணத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
Also Read: 500 ரூபாய் ஃபைன் இங்க கட்டுனா 300தான் - ஊரடங்கில் வசூல் வேட்டை நடத்திய போலி போலீஸ்
இந்நிலையில் எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் செய்யது கனி, ஆட்டோ ஓட்டுநரான உள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரின் இளைய மகன் அப்துல் கலாம்,(12) பரமக்குடியில் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஒரு வருடமாக தனது தந்தை தரும் காசுகளை உண்டியலில் போட்டு ரூ 2500 சேமித்து வைத்து உள்ளார்.
சேமித்த பணத்தில் முககவசங்களை வாங்கி பரமக்குடி பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய ஆட்டோ ஓட்டுனரின் 12 வயது மகன் தனது சேமிப்பு பணத்தில் இலவசமாக முககவசம் வழங்கிய இச்சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Auto Driver, Corona Mask, Corona positive, Covid-19, School student